
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நெப்போலியன். அவர் இயக்கிய புது நெல்லு புது நாத்து படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நெப்போலியன், அடுத்தடுத்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து அசத்தினார். குறிப்பாக ரஜினிகாந்துக்கு வில்லனாக அவர் நடித்த எஜமான் படம் நெப்போலியனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களில் கிரமாத்து நயாகனாக நடித்து அசத்தினார்.
சினிமாவில் கலக்கி வந்த நெப்போலியனை அரசியலுக்கு அழைத்து சென்ற கலைஞர் கருணாநிதி, அவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் நெப்போலியன். பின்னர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆன நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். இப்படி சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றிநடை போட்ட நெப்போலியன் திடீரென அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
நெப்போலியனின் இந்த முடிவுக்கு அவரது மகன் தனுஷ் தான் காரணம். நெப்போலியனுக்கு சுதா என்கிற மனைவியும், தனுஷ், குணால் என்கிற மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதில் இருந்தே தசைச்சிதைவு நோய் இருந்துள்ளது. இதனால் 10 வயதுக்குமேல் அவரால் நடக்க முடியாமல் போனது. மகனுக்கு போதுமான சிகிச்சை அளிக்கும் வசதி இங்கு இல்லாததால் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன்.
அமெரிக்காவில் செட்டில் ஆனது மட்டுமின்றி அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் தொடங்கினார் நெப்போலியன். அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்களாம். அங்கு வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் தானாம். அதுவும் சினிமாவில் லைட்மேன், மேக்கப் மேன் ஆகியோரின் பிள்ளைகளுக்கு தான் தன் கம்பெனியில் வேலைபோட்டு கொடுத்து அவர்களுக்கு சம்பளமும் வாரி வழங்கி வருகிறாராம் நெப்போலியன்.
இதையும் படியுங்கள்... அடுத்த 6 மாசத்துல தனுஷுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவோம் - நெப்போலியன் ஓபன் டாக்
ஐடி கம்பெனி மூலம் கோடி கோடியாய் வருமானம் ஈட்டி வரும் நெப்போலியன், அமெரிக்காவில் சொந்தமாக விவசாயமும் செய்து வருகிறார். இதற்காக 3 ஆயிரம் ஏக்கரில் விலை நிலம் ஒன்றை வாங்கிய நெப்போலியன், அங்கு மாடுகளை வளர்த்து வருவதோடு, காய்கறிகள் விலைவித்து அதை தன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அவரது பார்ம் ஹவுஸின் மான் வேட்டையாட பிரத்யேக இடமும் இருக்கிறது.
இதையெல்லாம் விட ஹைலைட் நெப்போலியனின் வீடு தான். அவர் பல கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற வீட்டை வாங்கி உள்ளதோடு, அதை தன் மகன் தனுஷுக்கு ஏற்றவாரு லிப்ட் வசதி மற்றும் எங்கு வேண்டுமானாலும் அவர் வீல் சேர் உடன் செல்லும் வகையில் லிஃப்ட் வசதி உடன் மாற்றியமைக்க பல கோடி செலவு செய்திருக்கிறார். அந்த வீட்டில் சினிமா தியேட்டர், நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம் என சகல வசதியும் இருக்கிறது.
நெப்போலியன் வீட்டில் டெஸ்லா, பென்ஸ், டொயோட்டா உள்பட நான்கு சொகுசு கார்கள் உள்ளன. இதில் இரு மகன்களுக்கு தனித்தனி கார், மற்றும் தன் சொந்த உபயோகத்திற்காக ஒரு கார் வைத்திருக்கும் நெப்போலியன், குடும்பத்துடன் அவுட்டிங் செல்ல தனி வேன் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தன் மகனுக்காக லிஃப்ட் வசதியையும் செய்து வைத்துள்ளார். இப்படி அமெரிக்காவில் ஒரு அம்பானியாக வாழும் நெப்போலியன் தன் மகன் தனுஷின் திருமணத்தை அண்மையில் ஜப்பானில் ஜாம் ஜாம்னு நடத்தி முடித்தார்.
மகன் தனுஷின் திருமணத்திற்காக கப்பலில் ஜப்பான் சென்ற நெப்போலியன், அங்கு திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து 200 நண்பர்களையும் வர வழைத்து அவர்களுக்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து அங்கு தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி தன் மகன் தனுஷின் திருமணத்தை நடத்தி முடித்தார். அந்த திருமணத்திற்காக அவர் ரூ.150 கோடி செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... திருமணம் முடிந்த கையேடு நெப்போலியன் மகன் தனுஷ் மனைவியோடு எங்கு அவுட்டிங் போயிருக்காரு பாருங்க!