ஒரே நாளில் ரிலீசாகும் 2 சூர்யா படங்கள்! கங்குவா உடன் இத்தனை படங்கள் மோதுகிறதா?

Published : Nov 11, 2024, 07:44 AM IST

நவம்பர் 14-ந் தேதி நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு போட்டியாக தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
ஒரே நாளில் ரிலீசாகும் 2 சூர்யா படங்கள்! கங்குவா உடன் இத்தனை படங்கள் மோதுகிறதா?
Theatre Release Movies on November 14

தமிழ் சினிமாவுக்கு அக்டோபர் மாதம் ஒரு பிளாக்பஸ்டர் மாதமாகவே அமைந்தது. ஏனெனில் அம்மாதம் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் தொடங்கி, சிவகார்த்திகேயனின் அமரன் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தினர். குறிப்பாக தீபாவளி ரிலீஸ் படங்கள் சக்கைப்போடு போட்டி வருவதால் நவம்பர் மாத முதல் வாரத்தில் புதுப்படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. அதனால் தீபாவளி ரிலீஸ் படங்கள் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகின்றன. இந்த நிலையில், நவம்பர் இரண்டாவது வாரத்தில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
Kanguva

கங்குவா

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா உடன் பாபி தியோல், நட்டி நட்ராஜ், திஷா பதானி, கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கங்குவா திரைப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கங்குவா திரைப்படம் உலகமெங்கும் சுமார் 11 ஆயிரத்து 500 திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அப்போ அந்த வில்லன் கார்த்தி தானா? மிரட்டலாக வெளியான கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரைலர்!

34
Phoenix

பீனிக்ஸ்

கங்குவா படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் மற்றொரு சூர்யா படம் பீனிக்ஸ். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை அனல் அரசு இயக்கி உள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக பல வெற்றிப்படங்களில் பணியாற்றி உள்ள இவர், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படமும் நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். 

44
Emakku Thozhil Romance

எமக்கு தொழில் ரொமான்ஸ்

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள படம் எமக்கு தொழில் ரொமான்ஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். இப்படத்தை பாலாஜி கேசவன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பாக திருமலை தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘காந்தாரா’ முதல் ‘புஷ்பா 2’ வரை பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் பான்-இந்தியா படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories