அஜித்தின் சிட்டிசன்; ஜஸ்ட் மிஸில் தவறவிட்ட தளபதி விஜய் - 23 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!

First Published | Nov 10, 2024, 9:42 PM IST

Ajith Citizen Movie : திரை கலைஞர் சரவண சுப்பையா இயக்குனராக தமிழ் திரை உலகில் முதல் முதலில் களமிறங்கியது தல அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான்.

Citizen Movie

தமிழ் திரை உலகில் நடிகராக பல திரைப்படங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வரும் நடிகர் தான் சரவணன சுப்பையா. இறுதியாக இந்த ஆண்டு பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான நிதிலனின் "மகாராஜா" திரைப்படத்திலும் ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். தமிழ் மொழியில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக நல்ல பல படங்களில் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் திரையுலகில் நடிகராக இப்பொழுது வலம் வரும் அவர், இயக்குனராகத் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன்னைவிட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கியவர் ஜோதிகா – மனைவியை ஆஹா, ஓஹோனு புகழ்ந்து பேசிய சூர்யா!

Thala Ajith

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அஜித் குமார் பல வேடங்கள் ஏற்று நடித்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்த திரைப்படம் தான் "சிட்டிசன்". இன்றளவும் அந்த திரைப்படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ்த் திரையுலகில் சரவண சுப்பையா இயக்குனராக களமிறங்கினார். பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லக்ஷ்மணன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சரவண சுப்பையா, சுமார் 23 ஆண்டுகால ரகசியம் ஒன்றை உடைத்திருக்கிறார். சிட்டிசன் திரைப்படம் உருவான விதம் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Tap to resize

Citizen Movie

அவர் பகிர்ந்த தகவல்... "நடிகர் அஜித் குமாருக்கு வாலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்துக்கு பிறகு பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். இந்த சூழலில் "முகவரி" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமான நிலையில் தான், நான் "சிட்டிசன்" கதையின் மொத்த விஷயனத்தையும் ஒரு புத்தகமாக அஜித்திடம் கொடுத்தேன். என்னை உடனடியாக டிஸ்டர்ப் செய்ய வேண்டாம், இந்த கதையை படித்துவிட்டு விரைவில் நானே உங்களுக்கு கூப்பிடுகிறேன்" என்று என்னிடம் அஜித் கூறினார். 

ஆனால் கதையை கொடுத்து ரொம்ப நாள் ஆகியும் அஜித்திடமிருந்து எந்த பதிலும் வராமல் இருந்த சூழ்நிலையில், நடிகை ரோஜா மூலமாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் என்னுடைய கதையை கேட்க தயாராக இருந்தனர்.

Saravana Subbaiah

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இந்த கதை பிடித்து போக, உடனடியாக அப்போது குஷி பட சூட்டிங் இருந்த நடிகர் விஜயிடம் இந்த கதையை சொல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் புறப்பட்டு விஜயிடம் கதை சொல்வதற்காக சென்றேன். அப்போது நான் நடந்து செல்வதை பார்த்த நிக் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் என்னை அழைத்து, அஜித் இப்பொழுது தான் எனக்கு பேசினார், உடனடியாக உங்களை அவரது அலுவலகத்திற்கு அழைக்கிறார் என்று சொல்ல, உடனே அங்கு சென்றேன். அஜித்தை சந்தித்து விட்டு விஜயிடம் செல்லலாம் என்று தான் முடிவெடுத்தேன். 

ஆனால் அஜித்தின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது ஒரு புதிய மோட்டார் பைக், ஹெல்மெட் மற்றும் ஒரு பேஜர் ஒன்றையும் பரிசளித்து, இந்த திரைப்படத்தை உங்களுக்காக நான் செய்து தருகிறேன். கதை பிரமாதமாக இருக்கிறது. இந்த படத்திற்காக இரண்டு படங்களுடைய கால்ஷீட்டை கொடுக்கிறேன் என்று கூறி திகைக்க வைத்தார். பிறகு விஜியிடம் அந்த கதையை சொல்லாமலேயே விட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார் அவர்.

அப்போ அந்த வில்லன் கார்த்தி தானா? மிரட்டலாக வெளியான கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரைலர்!

Latest Videos

click me!