மனைவிக்கு பிறந்தநாள்... பக்தி பரவசமாக மாறி பிரியாவுக்கு அட்லீ கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

First Published | Dec 7, 2023, 1:54 PM IST

இயக்குனர் அட்லீ தன் காதல் மனைவி பிரியாவின் பிறந்தநாளன்று அவரை ஜான்வி கபூருடன் மகா காலேஷ்வர் கோவிலுக்கு அழைத்து சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Atlee wife priya

தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்த அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பான் இந்தியா இயக்குனராக உருவெடுத்தார். அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றிவாகை சூடியதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் தன் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் அட்லீ.

Priya Atlee Birthday

அவர் அடுத்ததாக விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்கான கதை மற்றும் ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தன்னுடைய காதல் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அட்லீ. பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார் அட்லீ. இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என பெயரிட்டுள்ளார் அட்லீ.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D


Atlee, Priya

பிரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அட்லீ போட்ட பதிவில், நான் எனக்கொரு பெண் கொடு என கேட்டேன். ஆனால் கடவுள் எனக்கு ஒரு தேவதையை கொடுத்துள்ளார். அந்த தேவதை என்னுடைய அனைத்து கனவுகளையும் நனவாக்கி வருகிறது. என்னுடைய எல்லாமுமே நீ தான். மகன் மீர் உடன் சேர்ந்து சுஜி மம்மிக்கு நிறைய அன்போடு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறேன்”  என குறிப்பிட்டு இருந்தார்.

Atlee, Priya temple visit

அதுமட்டுமின்றி பிரியாவை சர்ப்ரைஸாக ஜான்வி கபூருடன் மகா காலேஷ்வர் கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு கடவுளை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அவர்களுடன் நடிகை ஜான்வி கபூரும் தனது காதலன் உடன் சென்று அக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சென்னை வெள்ளம்: களத்தில் இறங்கிய விஜய்; கப்சிப்னு ஆன அஜித்..! AKவின் செயலால் கடுப்பாகி பிரபலம் தந்த நச் பதிலடி

Latest Videos

click me!