karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இசையமைப்பாளர் சிதம்பரத்தை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ZeeTamil karthigai deepam serial
அதாவது, கார்த்திக் சிதம்பரத்திற்காக காத்திருக்க அவர் வர எல்லாரும் அவருடன் செல்பி எடுத்து கொள்ள சிரித்த முகத்துடனே வந்து கார்த்திக்கு கை கொடுக்க ரொம்ப பண்பான மனிதரா இருக்காரு என நினைத்து கொள்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் சிதம்பரம் நீ எதுக்கு இந்த துறைக்கு வந்த? உன்னால் இங்க ஒண்ணுமே சாதிக்க முடியாது என்பது போல பேசி வில்லத்தனத்தை காட்ட கார்த்திக் திறமையானவர்களை வெளியே கொண்டு வர தான் இந்த துறைக்கு வந்ததாக பதில் கொடுக்கிறான்.
karthigai deepam serial Update
அடுத்து உன்னால் ஒரு ஆல்பம் பாடலை கூட வெளியிட முடியாது என சொல்ல கார்த்திக் புது சிங்கரை வைத்து ஒரு ஹிட் பாடலை கொடுத்து காட்டுறேன் என்று சவால் விட நீ இந்த சவாலில் ஜெயித்து விட்டால் நான் இந்த துறையை விட்டே போயிடுறேன் என சிதம்பரமும் சவால் விடுகிறார். இருவரும் வாக்குவாதம் செய்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வளையத்தளங்களில் வெளியிடுகின்றனர்.