கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த தீபாவிடம் ஐஸ்வர்யா கேள்வி கேட்டு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த தீபாவிடம் ஐஸ்வர்யா கேள்வி கேட்டு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபா நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா அவளை சும்மா விட கூடாது. நான் ஒரு பொய் சொன்ன போது எனக்கு என்ன தண்டனை கொடுத்தீங்களோ அதே தான் அவளுக்கும் கொடுக்கணும் அது தானே நியாயம் என்று பேச அபிராமியும் ஆமாம் என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா நீங்க அவளை வெளியே அனுப்ப மாட்டீங்க. நான் அதை செய்கிறேன் என்று சொல்லி தீபாவை தரதரவென இழுத்து கொண்டு வருகிறாள்.
24
Karthigai deepam karthik
தீபாவை வெளியே தள்ளும் போது கார்த்திக் என்ட்ரி கொடுக்க எல்லாரும் அங்கு கூடி விடுகின்றனர். கார்த்திக் என்ன பிரச்சனை என்னாச்சு என்று கேட்க ஐஸ்வர்யா பொய் சொல்லிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கா, நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா. இவளால் பூஜை கேட்டு போச்சு என எல்லாரும் மொத்தமாக ரவுண்டு கட்டி அடிக்க கார்த்திக் தீபா எனக்கிட்ட சொல்லிட்டு தான் வேலைக்கு போகிறாள். அதுவும் நம்ம ஆபிஸில் தான் வேலை செய்கிறாள் என்று உண்மையை உடைக்க எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
மேலும் அவ தம்பிக்கு உதவனும் அதுக்காக வேலைக்கு போறதாக சொல்லி ம்யூசிக் கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தாள், நான் தான் இன்டெர்வியூ பண்ணி அதுக்கு தகுதியானவராக இருந்ததால் வேலைக்கு எடுத்தேன் என்று சொல்கிறாள். அபிராமி என்கிட்ட சொல்லல என்று பேச அருணாச்சலம் அவ அவளுடைய புருஷன் கிட்ட சொல்லிட்டு தான் போய் இருக்கா, இது அவங்களோட தனிப்பட்ட விஷயம், அதுல நாம தலையிட கூடாது என சொல்லி ஆப் ஆக்குகிறார்.
44
Karthigai deepam today episode
இருந்தாலும் அபிராமி ரூமில் டென்ஷனாக இருக்க அங்கு வரும் கார்த்திக் உங்ககிட்ட சொல்லாமல் விட்டது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்க அபிராமி எனக்கு அது பிரச்சனை இல்ல, பூஜை தடைபட்டு போய்டுச்சு அதான் கவலை என்று சொல்ல நான் குருஜியிடம் பேசிட்டேன், அவர் இன்னொரு நேரத்தை குறித்து கொடுத்திருக்கார் என்று சொல்லி கூல் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.