சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் ஆகியும் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் ஏராளமானோர் திண்டாடி வருகின்றனர். அரசு ஒரு புறம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் தன்னார்வலர்களும், திரைப்பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
24
Ajith with aamir khan and vishnu vishal
அதன்படி நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண பணிக்காக கொடுத்து தங்களுடைய ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி வருகின்றனர். அதேபோல் நடிகர் பார்த்திபன், விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, பாலா ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்துள்ளனர். நடிகர் விஜய்யும் தன்னுடைய ரசிகர்களை களத்தில் இறங்கி களப்பணி ஆற்ற உத்தரவிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இப்படி பல்வேறு பிரபலங்கள் உதவி வரும் நிலையில், எப்போது மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கும் நடிகர் அஜித், நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆமீர் கான் ஆகியோர் மீட்கப்பட்டதும் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. அஜித்தின் இந்த செயலை அஜித் ரசிகர்கள் கொண்டாடினாலும் இது கடும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.
44
bose venkat X post
பிரபலங்களுக்கு ஓடோடி சென்று உதவிய அஜித், அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சாடி வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் இந்த செயலை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என அவர் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.