Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!

Published : Oct 30, 2026, 10:00 AM IST

Jason Sanjay Acting Debut : சிக்மா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய், அடுத்ததாக ஹீரோவாக களமிறங்க உள்ளாராம். அப்படத்தை பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ஜேசன் சஞ்சய்யின் அடுத்த அவதாரம்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜேசன் சஞ்சய். தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகனான இவர், தற்போது திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய், விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க உள்ளாராம்.

கடந்த 2026 செப்டம்பர் மாதம் வெளியான 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜேசன் சஞ்சய். இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

முதல் படத்திலேயே இயக்குநராகத் தனது திறமையை வெளிப்படுத்திய ஜேசன் சஞ்சய், அடுத்ததாக எந்த மாதிரியான கதையை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், அதற்கு மாறாக அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் பரவத் தொடங்கின.

24
ஹீரோவாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்!

ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் திரையுலகில் பேசுபொருளாக மாறியது. அவரும் சில நேர்காணல்களில் நடிப்பின் மீதான தனது ஆர்வம் குறித்துப் பகிர்ந்திருந்ததால், விரைவில் அவரது நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. முன்னதாக, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சஞ்சீவ் இயக்கவுள்ள திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அவரது அறிமுகப் படம் தொடர்பாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

34
அட்லீ தயாரிப்பில் ஜேசன் சஞ்சய்?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படத்தை இயக்கிய கீர்த்திஸ்வரன், ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

மேலும், இந்தப் படத்தைப் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான அட்லீ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், ஜேசன் சஞ்சய்யின் திரைப்பயணத்தில் இது முக்கியமான திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது விஜய்யின் மகன் நடிக்கும் படத்தை அவரே தயாரிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
தீபாவளிக்கு வெளியாகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

ஜேசன் சஞ்சய்யின் புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்பு 2026ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தந்தை விஜய்யைப் போலவே ஜேசன் சஞ்சய்யும் கதாநாயகனாகத் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இயக்குநராகத் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ஜேசன் சஞ்சய், அடுத்ததாக நடிப்பிலும் தடம் பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories