ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்... அதுக்குன்னு இத்தனை கோடியா கேட்குறது?

Published : Jan 08, 2023, 04:13 PM IST

தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ள ஜான்வி கபூரும், சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
15
ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்... அதுக்குன்னு இத்தனை கோடியா கேட்குறது?

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். தற்போது அவர் கைவசம் விஜய்யின் வாரிசு திரைப்படம் உள்ளது. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா 2, இந்தியில் ரன்பீர் கபூர் உடன் அனிமல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவை அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாகும்.

25

நடிகை ராஷ்மிகா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதன் காரணமாக அவர் தனது சம்பளத்தை உயர்த்தினார். அதுவரை ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வாங்கி வந்த ராஷ்மிகா, புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின்னர் தன் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தினார். விஜய்யின் வாரிசு படத்துக்கும் அவர் இதே சம்பளத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரெண்டு பேருமே என் தம்பிகள் தான்... வாரிசு, துணிவு மோதல் குறித்து நடிகர் பிரபு அளித்த பளீச் பதில்

35

இந்நிலையில், தற்போது தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ள ஜான்வி கபூரும், சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

45

இந்த படம் தான் தென்னிந்திய திரையுலகில் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க அவர் கேட்டுள்ள சம்பளம் தான் தயாரிப்பாளர்களை தலைசுற்ற வைத்துள்ளதாம். முதல் படத்திலேயே அவர் ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டுள்ளதால் டோலிவுட்டே ஆடிப்போய் உள்ளதாம்.

55

இந்தியில் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி வந்த ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய படத்தில் நடிக்க டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளாராம். இதனால் அவரை நடிக்க வைக்கலாமா அல்லது வேறு ஹீரோயினை தேடலாமா என்கிற குழப்பமான மனநிலையில் படக்குழு உள்ளதாம்.

இதையும் படியுங்கள்...  அஜித்தை போல் சூர்யாவுக்கும் V சென்டிமெண்டை கையிலெடுத்த இயக்குனர் சிவா! சூர்யா 42 படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா

Read more Photos on
click me!

Recommended Stories