ஜன நாயகன் முதல் தக் லைஃப் வரை.... ஓடிடியில் அதிக ரேட்டுக்கு விற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள்

Published : Sep 17, 2025, 08:47 AM IST

OTT Deals : ஓடிடி தளங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன, அவை எந்த விலைக்கு விற்கப்பட்டன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Top 5 Highest OTT Deals in Kollywood

ஓடிடி தளங்கள் முன்பெல்லாம் எந்த படமாக இருந்தாலும் ரிலீசுக்கு முன்னரே போட்டி போட்டு வாங்கி வந்தன. ஆனால் தற்போது பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் தான் ரிலீசுக்கு முன்னர் வாங்குகிறார். மற்ற படங்களின் ரிசல்டை பொறுத்து அதனை ரிலீசுக்கு பின்னர் வாங்குகிறார்கள். அதுமட்டுமின்றி அதிகபட்ச தொகை இவ்வளவு தான் எனவும் நிர்ணயித்து உள்ளார். இனி எந்த படத்தையும் 125 கோடிக்கு மேல் வாங்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துள்ளதாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக விலைக்கு ஓடிடி உரிமை விற்பனையான டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

26
5. சூர்யா 46

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அதன் ஓடிடி உரிமை விற்பனையாகி இருக்கிறது. அதன்படி சூர்யா 46 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 90 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

36
4. குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடித்த படம் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.95 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. ஆனால் இப்படத்திற்கு எதிராக பாடல் காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். தீர்ப்பு இளையராஜாவுக்கு சாதகமாக வந்ததை அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை ஓடிடியில் இருந்து நீக்கி உள்ளனர்.

46
3. தக் லைஃப்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்திருக்க வேண்டிய படம் தக் லைஃப் தான். ஏனெனில் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.130 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து 130 கோடி கொடுக்க மறுத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் படக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.110 கோடிக்கு அப்படத்தை வாங்கி வெளியிட்டது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார்.

56
2. கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், அப்படம் ரிலீஸ் ஆகி 28 நாட்களில் ஓடிடிக்கு வந்தது. அப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. அப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

66
1. ஜன நாயகன்

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே அதன் ஓடிடி உரிமை விற்பனையாகிவிட்டது. அதன்படி ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது. அந்த வகையில் அவர்கள் நிர்ணயித்துள்ள அதிகபட்ச தொகையான 125 கோடிக்கு இப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகி இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories