‘மிராய்’ படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் பிரபல தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் இந்த அதிரடி சாகச மற்றும் கற்பனைத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தக் கற்பனைக் கதைத் திரைப்படமான மிராயில் தேஜா சஜ்ஜா சூப்பர் பவர்கள் கொண்ட ஒரு போர்வீரனாக நடிக்க, மஞ்சு மனோஜ் பிளாக் ஸ்வார்ட் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மூத்த நடிகை ஸ்ரேயா, ஜெகபதி பாபு, ஜெயராம் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட சமூக கற்பனைக் கதைத் திரைப்படத்திற்கு கிருத்தி பிரசாத் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 12 ஆம் தேதி பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.