அவதார் படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாவதை உறுதி செய்த ஜேம்ஸ் கேமரூன், அப்படங்களுக்கான பணிகளிலும் மும்முரம் காட்டி வந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, அப்படம் எப்போது ரிலீசாகும் என்கிற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இருந்தது.