Mirna Menon : கேரளாவில் பிறந்து கோலிவுட் திரைப்படங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை துவங்கிய நடிகை தான் மிர்னா மேனன், இவர் கேரளாவில் இடுக்கி பகுதியில் பிறந்தவர்.
கேரளாவில் தனது பட்டப்படிப்பை முடித்த மிர்னா மேனன், துபாய் நாட்டிற்கு சென்று மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த நிலையில் தான் அவர் சின்னத்திரை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான "பட்டதாரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த மிர்னா மேனன், கடந்த 2022ம் ஆண்டு முதல் தெலுங்கு திரை உலையிலும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
34
Mirna Menon
தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் மிர்னா மேனன், இறுதியாக இந்த 2024ம் ஆண்டு வெளியான "பர்த்மார்க்" என்கின்ற திரைப்படத்தில் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
44
Jailer movie actress mirna Menon
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது இணைய தொடர்களிலும் நடித்து வரும் மிர்னா மேனன், ஹாட்டான தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.