பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி பிறந்த நடிகை தான் திவ்யா துரைசாமி. ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றினார்.
அதன் பிறகு கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான "ஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார் திவ்யா துரைசாமி.
34
Actress Dhivya
தொடர்ச்சியாக மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் மற்றும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் சஞ்சீவன் என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்றும் திவ்யா துரைசாமி நடித்திருந்தார்.
44
Dhivya in Cook with Comali
தற்பொழுது அவருடைய நடிப்பில் அதர்ம கதைகள் என்கின்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தெறி திரைப்படத்தில் நடிகை சமந்தா அணிந்து அசத்திய புடவை போலவே ஒரு புடவையை கட்டிக்கொண்டு, அவரைப்போல ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு அசத்தியுள்ளார் அவர்.