அவர் மட்டும் தான் பாலிவுட் போவாரா என்ன? Khanனை வைத்து தனது யூனிவெர்ஸை உருவாக்க ரெடியான லோகேஷ்!

First Published | Aug 18, 2024, 7:35 PM IST

Lokesh Kanagaraj : ஏற்கனவே தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Maanagaram Movie

தமிழ் சினிமா ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து, அதற்கு தகுந்தார் போல தனது திரைக்கதையை அமைத்து, மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ள இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார்.

வாடகை பாக்கிவச்சுட்டு எஸ்கேப் ஆனேனா? கடுப்பான யுவன் - வீட்டு உரிமையாளருக்கு பறந்த நோட்டீஸ்!

Kaithi Movie

அதன் பிறகு பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து "கைதி" என்கின்ற திரைப்படத்தை எடுக்க அவர் முடிவு செய்தார். இருப்பினும் அப்பொழுது விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக இருந்த காரணத்தினால், அக்கதையை ஏற்று நடித்து அதை மெகா ஹிட் திரைப்படமாக மாற்றிக் கொடுத்தார் பிரபல நடிகர் கார்த்தி. விரைவில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Tap to resize

Lokesh Kanagaraj, Kamal Haasan

அதன்பின் தொடர்ச்சியாக தளபதி விஜயின் மாஸ்டர், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் தளபதி விஜயின் லியோ என்று ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தமிழ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் கூலி என்கின்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கி வருகிறார். விரைவில் அப்படத்திற்கான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aamir Khan

இந்த சூழலில் ஏற்கனவே பாலிவுட் உலகிற்கு சென்று மெகா ஹிட் வெற்றியை கொடுத்த அட்டிலியை தொடர்ந்து, இப்போது லோகேஷ் கனகராஜன் பாலிவுட் உலகில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரபல Mythri Movies Makers நிறுவனத்தின் சார்பில் உருவாகவுள்ள ஒரு பான் இந்தியன் திரைப்படத்திற்கான கதையை பிரபல நடிகர் அமீர் கான் உடன் லோகேஷ் கனகராஜ் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரபுதேவா போட்ட 3 கண்டிஷன்... ஏற்க மறுத்து காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! பிரேக் அப் ஸ்டோரி

Latest Videos

click me!