பிரபுதேவா போட்ட 3 கண்டிஷன்... ஏற்க மறுத்து காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! பிரேக் அப் ஸ்டோரி

First Published | Aug 18, 2024, 2:50 PM IST

பிரபுதேவாவும், நயன்தாராவும் சில காலம் உறவில் இருந்த நிலையில், அவர்கள் திடீரென பிரிந்தனர். அந்த பிரிவிற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
 

Nayanthara

நடிகையாக நயன்தாராவின் திரைப்பயணம் ஐயா படம் மூலம் தொடங்கியது. இதையடுத்து சந்திரமுகி, கஜினி போன்ற படங்களின் வெற்றி அவருக்கு திரையுலகில் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர் வெற்றிகளுடன் நயன்தாரா முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகையாக உச்சத்தைத் தொட்ட நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாம் சர்ச்சைகளே. குறிப்பாக இரண்டு முறை காதலில் தோல்வியடைந்தார். 

simbu, nayanthara

தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் நயன்தாரா சிம்பு மீது காதலில் விழுந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இருவரின் தனிப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின. அந்த நேரத்தில், சிம்பு மற்றும் நயன்தாராவின் காதல் விவகாரம் ஊடகங்களை அலற வைத்தன. சிம்புவுடனான உறவைப் பற்றி நயன்தாரா ஒருபோதும் வெளிப்படையாகப் பேசவில்லை. அதை ரகசிய காதலாகவே வைத்திருந்தார். நயன்தாரா-சிம்பு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தகவல் வெளியானது. ஆனால் திடீரென சிம்புவுடன் பிரேக் அப் செய்து பிரிந்தார் நயன்தாரா.

Tap to resize

Nayanthara, Prabhu Deva

சிம்புவை விட்டு பிரிந்த நயன்தாரா, திருமணமான நடிகர் பிரபுதேவாவுடன் நெருக்கம் காட்டினார். நடன இயக்குனராகவும், பிரபலமான இயக்குனராகவும் வலம் வந்த பிரபுதேவாவை உருகி உருகி காதலித்தார் நயன்தாரா. 2009 ஆம் ஆண்டில், அவர்கள் இருவரும் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. பின்னர் இருவரும் திரைப்பட விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதன்மூலம் தங்களின் காதலை வெளிப்படையாகவே அறிவித்தனர்.

Prabhu deva ex wife

நயன்தாராவை திருமணம் செய்துகொள்வதற்காக, தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. இதனால் நயன்தாரா மீது ரம்லத் கடும் அதிருப்தி தெரிவித்தார். சட்டப்போராட்டமும் நடத்தினார். 2011ல் ரம்லத்-பிரபுதேவாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இதனால் நயன்தாராவை மணக்க பிரபுதேவாவுக்கு வழி தெளிவானது.

Nayanthara, Prabhu Deva Love

விரைவில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், பிரபுதேவாவை நயன்தாரா பிரிந்தார். பிரபுதேவாவை நயன்தாரா ஏன் பிரிந்தார் என்பதில் தெளிவு இல்லை. இறுதியாக, அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவுக்கு பிரபுதேவா சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாராம். அவை பிடிக்காததால் நயன்தாரா பிரிய முடிவு செய்தாராம். 
 

Nayanthara, Prabhu Deva Break Up

கிறிஸ்தவரான நயன்தாராவை மதம் மாற வேண்டும் என்று பிரபுதேவா கூறியுள்ளார். இந்து மதத்தை ஏற்க நயன்தாரா ஒப்புக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகள் தன்னுடன்தான் இருப்பார்கள், அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மூன்றாவது நிபந்தனையாக நடிப்புக்கு முழுக்கு போட வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை. நடிப்பதை விட முடியாது என்று நயன்தாரா கூறியுள்ளார். 

Actress Nayanthara

இது தொடர்பாக நயன்தாரா-பிரபுதேவா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன், நடிகையாக தொடர்ந்து நடிப்பேன் என்று பிரபுதேவாவை நயன்தாரா சமாதானப்படுத்த முயன்றும் பிரபுதேவா கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே பிரபுதேவா இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறாரே, திருமணத்திற்குப் பிறகு என்ன நிலைமை என்று நயன்தாரா கவலைப்பட்டாராம். இப்படித்தான் பிரபுதேவா-நயன்தாரா காதல் கதை முடிவுக்கு வந்தது. 

Latest Videos

click me!