நெகோஷியேட்டர், ஃபீல் ஏஜென்ட், ஸ்பை என்று விஜய் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் திருமணமாகி மனைவி மற்றும் மகனுடன் வாழும் ஒரு கதாபாத்திரம். இவருடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், கஞ்சா கருப்பு, யோகி பாபு என்று ஏராளமான பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மைக் மோகனுக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.