நடிகர் விஜய்யின் கோட் பட டிரைலர் தான் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் டாப் 1 இடத்தை பிடித்திருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் பல்வேறு விதமான கெட் அப்கள் டிரைலரில் காட்டப்படுவதால் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். அதுமட்டுமின்றி விஜய்யின் ஐகானிக் படங்களில் இருந்து அவரின் மேனரிசத்தையும் படம் முழுக்க வெங்கட் பிரபு பயன்படுத்தி இருப்பது டிரைலரிலேயே தெரிகிறது.