செல்வராகவன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று புதுப்பேட்டை. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம். குறிப்பாக நா. முத்துக்குமார் வரிகளில், யுவன் இசையமைத்த ஒரு நாளில் பாடல் காலம் கடந்து கொண்டாடப்படும் பாடலாக உள்ளது. அப்பாடல் உருவானது எப்படி என்பதை பார்க்கலாம்.
24
Pudhupettai Movie
அந்த பாடலின் தலைப்பு போலவே அப்பாடல் உருவானது ஒரே நாளில் தானாம். ஒருமுறை செல்வராகவனும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்திருக்கிறார்கள். அப்போது அப்படத்தின் எண்ட் கார்டில் ஒரு பாடல் வந்திருக்கிறது. உடனே நம்ம புதுப்பேட்டை படத்துக்கும் எண்ட் கார்டுக்கு ஒரு பாட்டு வேண்டும் என யுவனிடம் கேட்டிருக்கிறார் செல்வா. அதற்கு யுவன் சங்கர் ராஜாவும் ஓகே சொன்ன பின்னர் தான் அப்பாடல் உருவாகி இருக்கிறது.
அந்த பாடலுக்கு நா முத்துக்குமார் ஒரே நாளில் பாடல் வரிகளை எழுதி கொடுக்க, யுவன் சங்கர் ராஜாவும் அதை ஒரே நாளில் கம்போஸ் செய்து முடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி முடித்த பின்னர் அடுத்த இரு தினங்களுக்கு செல்வராகவன், நா முத்துக்குமார் ஆகியோர் யுவன் ஸ்டூடியோவில் இந்தப் பாடலையே திரும்ப திரும்ப போட்டு கேட்டு வைப் செய்து வந்தார்களாம்.
44
Pudhupettai Oru Naalil Song Secret
அப்படி அவர்களால் ஒரு நாளில் உருவாக்கப்பட்ட அந்த பாடல் தான் இன்றளவும் பலரின் பிளேலிஸ்ட்டில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது. அந்த பாடலை கேட்டால் சோகத்தில் இருப்பவர்களுக்கு கூட உத்வேகம் வந்துவிடும், அந்த அளவுக்கு ஆழமான வரிகளை எழுதி இருப்பார் நா முத்துக்குமார். யுவன் - நா முத்துக்குமார் காம்போவில் பல ஹிட் பாடல்கள் வந்திருந்தாலும் இந்த ‘ஒரு நாளில்’ பாடல் ஒரு மேஜிக் தான் என்றே சொல்லலாம்.