அரங்கமே வேடிக்கை பார்க்க ஒரே மேடையில் மோதிக் கொண்ட இளையராஜா, வைரமுத்து!

First Published | Aug 18, 2024, 11:09 AM IST

இசைஞானி இளையராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இருவரும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட நிகழ்வு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருவரும் ஒருவரையொருவர் உயர்த்திப் பேசி, மறைமுகமாக விமர்சித்துக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

Ilaiyaraaja, vairamuthu

ஒரே மேடையில் இசைஞானி இளையராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இருவரும் வார்த்தையால் மோதிக்கொள்ளும் காட்சி ரசிகர்களை சிரிப்பலையால் அதிர வைத்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இருவரும் தான். பாடலுக்கும், கவிதைக்கும் வைரமுத்து என்றால், இசைக்கு இளையராஜா. இசையின் கடவுள் என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட 4000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்து பாடல்களை ஹிட் கொடுத்துள்ளார்.

vairamuthu

இதே போன்று தான் கவிப்பேரரசு வைரமுத்துவும். 40 ஆண்டுகால சினிமா வரலாற்றில் 7500க்கும் அதிகமான பாடல்களுக்கு வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் இசைஞானியும், கவிப்பேரரசும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போன்று இருவரும் ஒன்றாக இருந்தனர். நாளடைவில் இருவரும் மோதிக் கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Tap to resize

Vairamuthu and Ilaiyaraaja Clash

இந்த சண்டையின் உச்சகட்டம் தான் ஒரு மேடையில் நடந்தது. அதில் இருவரும் ஒருவருக்கொருவர் காலை வாரிக் கொள்ளும் அளவிற்கு மற்றவர்களை உயர்த்தி பேசி, அவர்களை தாழ்த்திக் கொண்டனர். பொதுமேடையில் இருவரும் ஒன்றாக சேர்ந்தாலே சண்டை தான் என்று சொல்லும் அளவிற்கு அவர்களது மோதல் இருந்தது. இதன் காரணமாக இருவருமே ஒன்றாக பொது மேடையில் கலந்து கொள்வதை தவிர்த்தனர்.

Ilaiyaraaja and Vairamuthu Fight

ஆனால், ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளும் ஒரு சூழல் ஏற்பட்டது. அது பிரபல பின்னணி பாடகியான பி சுசிலாவிற்கு பாராட்டு தெரிவிக்கும் சுசிலா65 என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த சினிமா உலக ஜாம்பவான்களும் கலந்து கொண்டனர். அதில் இசைஞானியும், கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டனர்.

Ilaiyaraaja

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலில் பேசிய இளையாராஜா, கவிப்பேரரசு வைரமுத்துவை முன்பு வைத்து கொண்டு, கவியரசு கண்ணதாசனைப் போல ஒரு கவிஞன் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது என்று பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வைரமுத்து சிறந்த கவிஞன், கவியரசர் கண்ணதாசனைப் போல எங்களுக்கும் வேறுபாடில்லை.

Ilaiyaraaja

ஆனால், உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் என்பவரைத் தவிர யாருக்கும் கருத்து வேறுபாடில்லை என்று கூற ஒட்டு மொத்த அரங்கமும் கை தட்டலாலும், சிரிப்பலையாலும் அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!