'ஜெயிலர்' ஆடியோ லாஞ்சில் ரஜினி பேசிக்கொண்டிருக்கும் போது.. மைக்கை பிடுங்கி அரங்கையே அதிர விட்ட ரம்யா கிருஷ்ணா!

First Published | Jul 29, 2023, 10:21 AM IST

'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசி கொண்டிருக்கும் போதே... மைக்கை வாங்கி ரம்யா கிருஷ்ணா பேசிய அந்த ஒற்றை டயலாக், ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிர வைத்து விட்டது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத பல விஷயங்களை பேசியதை பார்க்க முடிந்தது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனக்கு கதை சொல்ல வந்தது முதல், காக்கா - கழுகு குட்டிக்கதை, குடிப்பழக்கத்தால் வந்த விளைவு, சூப்பர் ஸ்டார் பட்டம், தன்னை செதுக்கிய இயக்குனர்கள் பட்டியல் என ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியபோது, என்றுமே சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தொல்லை தான். ஹுக்கும் பாடலில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் என்கிற வார்த்தையை கூட நீக்க சொன்னதாக தெரிவித்தார். அப்போது கீழே அமர்ந்து, ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிவந்து, ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் மைக்கை வாங்கி யாரும் எதிர்பாராத விதமாக 'படையப்பா' படத்தில் நீலாம்பரி ரஜினிகாந்தை பார்த்து பேசும், "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்... கூடவே பொறந்தது எங்கேயும் போகாது"! என பேச கைதட்டல்களால் சென்னை நேரு ஸ்டேடியதையே அதிர வைத்து விட்டது.

குடி பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை..!
 

Tap to resize

மேலும் இதே சூப்பர் ஸ்டார் பிரச்சனை குறித்து கலாநிதிமாறன் பேசும்போது, ரஜினிகாந்த்க்கு 70 வயது ஆகிவிட்டது. இன்னும் அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள். அப்படி உங்களுக்கு 70 வயதாகும்போது உங்களுக்காக, உங்களை நடிக்க வைக்க  போட்டி போட்டால்? நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என கூறினார்.

பிரமாண்டமாக நடந்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா அனிருத்தின் பவர் ஃபுல் பாடல்,  தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம் என கலர்ஃபுல்லாக களைகட்டியது. 'ஜெயிலர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில், இந்த படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரிப்,யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வமாக கதையை சொல்ல சொன்ன ரஜினியிடம் அவகாசம் கேட்ட நெல்சன்! விஜய் படம் தான் காரணமா? ரஜினி கூறிய தகவல்!

Latest Videos

click me!