சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து, நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தயாரிப்பாளர்கள் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஜாக்கி செரீப், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.