சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த மாதம் 9-ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய லாக்கரில் வைக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த 3 வருடங்களாக இந்த லாக்கரை நான் திறந்து பார்க்கவில்லை என்றும், தன்னுடைய வீட்டில் வேலை செய்து வரும் மூன்று பேருக்கு, லாக்கரின் சாவி எங்கு இருக்கிறது என்பது தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த விசாரணையின் போது, மூவரின் சமீபத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து குறித்து சோதனை செய்த போது.. ஈஸ்வரி என்பவர் தன்னுடைய வருமானத்திற்கு மீறிய விதத்தில் நகை அடகு வைத்து, அந்த பணத்தை வங்கிக் கணக்கின் வழியாக பெற்றதும்... சுமார் ஒரு கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியதும் தெரிய வந்தது.
ஈஸ்வரியிடம் வழக்கத்திற்கு மாறாக அதிக பண வரவு உள்ளதை கண்டுபிடித்த அவரின் கணவர், திடீரென உனக்கு இவ்வளவு சொத்துக்கள்... வீடு மற்றும் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் அளவிக்கும் எப்படி பணம் வந்தது என கேட்டபோது, ஈஸ்வரி நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பினாமி என்றும், இது நம் பெயரில் இருந்தாலும் நமக்கு சொந்தமானது இல்லை. இதற்கு உரிமையானவர் ஐஸ்வர்யா என தெரிவித்துள்ளார். மேலும் இதற்காகவே தனக்கு பணம் கொடுத்ததாகவும் கூறி சமாளித்துள்ளார்.