வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

Published : Aug 18, 2022, 10:50 AM ISTUpdated : Aug 18, 2022, 10:52 AM IST

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு வருகை தர சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்ததாகவும், நெருங்கிய நண்பர் என்பதால் அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

PREV
14
வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்
Venthu Thaninthathu Kaadu

தனுஷின் சமீபத்திய வெளியீடான மாநாடு திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கு  மாபெரும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு., பத்து தல உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்த வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து 10 வருட இடைவெளிக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. முந்தைய வெளியீட்டின் போதே அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை  இயக்குனர் கொடுத்திருந்தார். ஆனால் 10 வருடங்கள் கழித்தே மீண்டும் இவர்கள் இணைந்து புதிய படத்தை தயாரித்து வருகின்றனர். இதனால் படம் குறித்த அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

24
Venthu Thaninthathu Kaadu

சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கி வேடங்களில் நடித்து வருகின்றனர். படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த  படத்திலிருந்து முதல் சிங்கிளாக காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை தனுஷ் பாடியிருந்தார் பாடலுக்கான வரிகளை தாமரை இயற்றி இருந்தார்.

அதோடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதியே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. ஒரு வருடம் கழித்தே படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாக ஆரம்பித்தன.  முதலில் இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு...Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

 

34
Venthu Thaninthathu Kaadu

சமீபத்தில் படத்தின் அடுத்த சிங்குளாக இந்த படத்தில் இருந்து மறக்குமா நெஞ்சம் என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. முன்னதாக படத்திலிருந்து வெளியான டீசர் மூலம் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த ஒரு இளைஞனின் கதையை இது விவரிக்க கூடும் என தெரிகிறது. படத்தின் போஸ்டரில் உறங்கும் ஆண்கள் கூட்டத்திற்கு இடையே தனுஷ் காணப்பட்டார்.

முன்னதாக இந்த படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்த சிம்புவை கண்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். தற்போது இந்த படம் திரைக்கு தயாராகி வருகிறது. அதோடு படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...போட்டோ போதாதென நீச்சல் உடை வீடியோவையும் வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா..

44
venthu thaninthathu kaadu

இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த கலந்து கொள்வார் என்கிற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் சிம்புவின் இந்த படத்திற்கு வருவார் எனவும் கூறப்படுகிறது.

அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு வருகை தர சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்ததாகவும், நெருங்கிய நண்பர் என்பதால் அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான தகவல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

Read more Photos on
click me!

Recommended Stories