நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு தனுஷின் படம் தற்போது திரையரங்குகளில் ஜொலித்து வருக்கிறது. இவரின் முந்தைய படங்களான ஜகமே தந்திரம் முதல் தி கிரே மேன் வரை கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் தான் வெளியாகி வருகிறது. இதனால் திரையரங்கு கொண்டாட்டங்களை அவரது ரசிகர்கள் மிஸ் செய்து வந்தனர்.
25
thiruchitrambalam
இந்நிலையில் தான் இன்று தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனுஷின் வெற்றி படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதோடு தங்கமகனுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் அமைந்துள்ளது.
நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இதில் நடித்துள்ளனர். பாரதிராஜா தாத்தாவாகவும், பிரகாஷ்ராஜ் அப்பாவாகவும் இந்த படத்தில் தோன்றுகிறார்கள், உணவு டெலிவரி செய்யும் படித்த இளைஞனின் கதையை சித்தரிக்கிறது திருச்சிற்றம்பலம்.
35
thiruchitrambalam
படத்தில் பழம் என்னும் ரோலில் வரும் தனுசுக்கும் அவரது தோழியாக வரும் நித்யா மேனனுக்கும் இடையிலான உறவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என இரண்டு பெண்கள் மீது நாயகனின் கண்ணோட்டம் பதிகிறது. இறுதியில் தனுஷ் இந்த மூன்று நாயகிகளில் எவருடன் ஜோடி சேர்வார் என்பதே படத்தின் கதையாக இருக்க கூடும்.
அதோடு கண்டிப்பான தந்தையின் பிள்ளையாக இருக்கும் தனுஷ் தனது தாத்தா மற்றும் தோழியின் அரவணைப்பால் அவ்வப்போது மனதை தேற்றி கொள்கிறார். மண் சோர்வுடன் இருக்கும் இளைஞன் இறுதியில் காவல் துறை அதிகாரி இருக்கும் தனது தந்தையின் அன்பை பெறுகிறாரா ? என்பதை படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன பேனரின் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. அதிலும் தெலுங்கு ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகின்றனர். விரைவில் வாத்தி படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைக்கும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அங்கு ஏற்கனவே மிகுந்திருந்தது. இந்நிலையில் இன்று திருச்சிற்றம்பலம் படம் மூலம் அங்குள்ள ரசிகர்களை கவர்ந்து விட்டார் தனுஷ்.
45
thiruchitrambalam
தமிழக திரையரங்குகளில் வெளியாகிய ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் திருசிற்றம்பலத்தை காண தனுஷ், அனிருத்துடன் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றுக்கு அதிகாலை காட்சிக்கு வருகை தந்த இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் வேஷ்டி சட்டை அணிந்து இசை அமைப்பாளருடன் பால்கனிகள் நின்றபடி ரசிகர்களுக்கு காட்சியளிக்கிறார் டி. முன்னதாக தி கிரே மேனில் எதிர்மறை தோற்றத்தில் நடித்திருந்த தனுஷை பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் இவர் தனது பழைய பாணிக்கு திரும்பி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.