54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை!

Published : Aug 17, 2022, 10:27 PM IST

முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது இதுகுறித்த உண்மை தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.  

PREV
16
54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை!

அஜித் நடித்த ஆசை மற்றும் உல்லாசம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் அஜித்தின் அறிமுகத்தை பெற்ற எஸ்.ஜே .சூர்யா, பின்னர் தன்னுடைய முதல் படமான 'வாலி' படத்தை அஜித்தை வைத்து இயக்கி, மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். முதல் படத்திலேயே ஒட்டு மொத்த இயக்குனர்களையும் கவனத்தையும் ஈர்த்த எஸ்.ஜே.சூர்யா அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

26

அஜித்தை தொடர்ந்து, விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் எஸ்.ஜே.சூர்யா. விஜயு - ஜோதிகாவை வைத்து இவர் இயக்கிய 'குஷி' படம், வேறு லெவலுக்கு வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் முதல், கட்டிப்பிடி கட்டிப்பிடி பாடல் வரை, அனைத்துமே... ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்: இவள் பெண்ணா.. அல்ல தேவதையா.. வழவழப்பான உடையில் மெல்லிய இடையை லைட்டாக காட்டிய அதிதி ஷங்கர்! கியூட் போட்டோஸ்..!
 

36

நடிகையாகும் ஆசையோடு, திரையுலகில் காலடி எடுத்து வைத்த எஸ்.ஜே.சூர்யா... இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த பின்னர், மூன்றாவது படமான நியூ படத்தை தானே இயக்கிய அதில் ஹீரோவாகவும் நடித்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு, சைன்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்ட இந்த படம், சில சர்ச்சைகளை சந்தித்தது. இந்த படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களாலேயே இந்த படத்தை பார்த்தவர்கள் பலர். எனவே இப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலித்தது.

46

இதை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கிய எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள் படு தோல்வியை சந்தித்ததால்.. ஒரு கட்டத்தில் படம் இயக்குவதற்கும், நடிப்பதற்கும் ரெஸ்ட் விட்டார் எஸ்.ஜே.சூர்யா. நீண்ட இடைவெளிக்கு பின்னர், எஸ்.ஜே.சூர்யா நடித்த 'இறைவி' படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்ட பட்டது. இந்த படத்திற்கு பின்னர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

மேலும் செய்திகள்: 5 நாளில் வசூலை அள்ளிய 'விருமன்'..! சூர்யா - கார்த்திக்கு வைரகாப்பை பரிசாக கொடுத்த பிரபலம்.!
 

56

 அந்த வகையில் இவர் வில்லனாக நடித்து வெளியான மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. மேலும் மீண்டும் தரமான கதைகளை தேர்வு செய்து நாயகனாகவும் நடித்து வருகிறார். சினிமா கேரியரில் டாப் கியரில் பயணித்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ள நிலையில், அவருக்கு அவரது வீட்டில் பெண் பார்த்து வருவதாக தகவல் வெளியானது.

66

இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய திருமணம் குறித்து எழுந்த தகவல் உண்மையா? என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படி வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை எனவும், தற்போது தன்னுடைய கவனம் முழுவதும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் தான் உள்ளது என தெரிவித்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

மேலும் செய்திகள்: படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் நாசர்... மருத்துவமனையில் அனுமதி! திரையுலகில் பரபரப்பு..

 

Read more Photos on
click me!

Recommended Stories