கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.
இதில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், படத்திற்காக பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் விதமாக மிக பிரமாண்டமாக, விஜிபி-யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடிகர் சூர்யா 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது 'விருமன்' படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.