படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் நாசர்... மருத்துவமனையில் அனுமதி! திரையுலகில் பரபரப்பு..

First Published | Aug 17, 2022, 7:59 PM IST

நடிகர் நாசர் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த நிலையில், திடீர் என விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ் சினிமாவின் ரஜினி, கமலின் துவங்கி தற்போது உள்ள விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் படங்கள் வரை குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கி வருபவர் நடிகர் நாசர். இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான, 'கல்யாண அகதிகள்' என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேண்டாம் என எப்படி பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் திறமை கொண்டவர். 

நாசர் நடிகர் என்பதை தாண்டி டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர், நாடக நடிகர், அரசியல்வாதி என பன்முக திறமையோடு திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார். அதே போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர். தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: சேலை மாராப்பை நழுவ விட்டு... முன்னழகை காட்டி இளசுகளை மூட் அவுட் செய்த சாக்ஷி அகர்வால்! ஹாட் போட்டோஸ்!
 

Tap to resize

சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருக்கும், நாசர்... தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று படக்குழுவினர் சிகிச்சையளித்து வரும் நிலையில், தற்போது இவரது உடல்நிலை நலமாக உள்ளதாக அவரது மனைவி கமீலா நாசர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: திரையரங்குகளுக்கு மக்கள் வராததற்கு காரணம் படங்கள் அல்ல..? நடிகர் மாதவன் பேச்சால் பரபரப்பு..!
 

Latest Videos

click me!