இவள் பெண்ணா.. அல்ல தேவதையா.. வழவழப்பான உடையில் மெல்லிய இடையை லைட்டாக காட்டிய அதிதி ஷங்கர்! கியூட் போட்டோஸ்..!

First Published | Aug 17, 2022, 9:03 PM IST

'விருமன்' பட நாயகி... அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

முதல் படத்திலேயே மிகவும் பிரபலமாக அறியப்படும் நாயகிகள் ஒரு சிலரே... அப்படி அனைவராலும் அறியப்பட்ட பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். தற்போது பிஸியான நடிகையாக மாறியுள்ளார். 

இவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'விருமன்' திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு... திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. ஏற்கனவே திரையில் வந்த கதை போல தான் உள்ளது என ஒரு தரப்பினர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அதிதி ஏற்று நடித்திருக்கும் தேன் மொழி கதாபாத்திரத்தில் வாழ்ந்து நடித்துள்ளார் என்றும், ஆட்டத்திலும் தூள் கிளப்பியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஹீரோவை போல் இருக்கும் மணிரத்னம் - சுஹாசினியின் மகன் நந்தன்..! வைரலாகும் ரீசென்ட் போட்டோ..!
 

Tap to resize

முதல் படம் வெளியாகும் முன்னரே, நடிகர்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக... 'மாவீரன்' படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்ட அதிதி, அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஒரே மாதிரி தன்னை வெளிகாட்டிக்கொள்ள நினைக்காத அதிதி, முதல் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தாலும், போட்டோ ஷூட்டுகளில் மாடர்ன் தேவதையாக ஜொலிக்கிறார். அதிலும் தற்போது வழவழப்பான ஸ்கர்ட் மற்றும் அழகிய கிராப் டாப்பில், மெல்லிய இடை லைட்டாக தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

மேலும் செய்திகள்: குக் வித் கோமாளி சீசன் 3 பைனலில் தொகுப்பாளர் ரக்சன் பங்கேற்காதது ஏன்? முதல் முறையாக அவரே கூறிய தகவல்!
 

Latest Videos

click me!