'சீதா ராமன்' சீரியலில் பிரியங்கா நல்காரிக்கு பதில் இனி இந்த விஜய் டிவி சீரியல் நடிகையா? வைரலாகும் புகைப்படம்!

First Published | Jun 15, 2023, 8:11 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும், 'சீதா ராமன்' தொடரில் இருந்து நடிகை பிரியங்கா நல்காரி விலகியதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பதில் நடிக்கவுள்ள நடிகை யார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில், மூன்று வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் கடந்த ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, சமீபத்தில்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட 'சீதா ராமன்' தொடரில் பிரியங்கா நல்காரி நடிக்க துவங்கினார்.
 

'ரோஜா' சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சிபு சூரியன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா 2' தொடரில்  கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அக்கா ஷிவானிக்கே அழகிலும்... கவர்ச்சியிலும் டஃப் கொடுக்கும் ஷிவாத்மிக்கா! கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!
 

Tap to resize

பிரியங்கா நல்காரிக்கு ஏற்கனவே அவருடைய காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பிரியங்கா நல்காரி மற்றும் அவரின் காதலர் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை இருவருமே... பேசி சமரசம் செய்து கொண்டு, ஒருவழியாக கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர், மலேசியாவில் உள்ள கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.
 

இந்த திருமணத்தில் பிரியங்கா நல்காரி குடும்பத்தின்ருக்கு சம்மதம் இருந்தாலும், அவரின் காதலர் குடும்பத்தில் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என தெரிவித்திருந்தார். விரைவில் தன்னுடைய குடும்பத்தினர் மனம் மாறிவிடுவார்கள் என்பதை தெரிவித்ததோடு, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என பிரியங்கா கூறிய நிலையில், சமீபத்தில் தன்னுடைய கணவருக்கு நான் நடிப்பதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் விரைவில்  'சீதா ராமம்' தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பொம்மை படத்தை புரோமோட் செய்த பிரியா பவானி ஷங்கர்! 'ஆதிபுருஷ்' படத்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !
 

இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும், தன்னுடைய குடும்பத்திற்காக இவர் சீரியலை விட்டு விலகுவதால் தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர். மேலும் தற்போது 'சீதா ராமன்' தொடர் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில்...  இந்த சீரியலில்பிரியங்கா நல்காரி நடித்து வரும் கதாபாத்திரத்தில், விஜய் டிவி சீரியலில் 'செந்தூரப்பூவே' சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

சீதா ராமன் சீரியலில், ஹீரோவாக ஜே டிசோசா என்பவர் நடித்து வருகிறார். பாக்கிய லட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி மஹாலக்ஷ்மி என்கிற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிபிடித்தக்கது.

இளம் நடிகருடன் ரகசிய தொடர்பில் இருக்கும் விஜய் யேசுதாஸ் மனைவி? காரணம் தனுஷா... பகீர் கிளப்பும் பயில்வான்!

அழகுதான் முக்கியம் என பிடிவாதமாக இருக்கும் மாமியார் மஹாலக்ஷ்மியிடம் உண்மையான அழகு ஒருவரின் மனசு தான் என்பதை நிரூபிக்க போராடும் மருமகளாக சீதா நடித்து வருகிறார். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் இன்னும் ஒரு சில எபிசோடில் மட்டுமே பிரியங்கா நல்காரி நடிப்பார் என கூறப்படும் நிலையில்,  சீதா  இந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு ஸ்ரீநிதி பொருந்தி நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!