Shivathmika Rajashekar
பிரபல தெலுங்கு நடிகர், ராஜசேகர் வரதராஜன் மற்றும் நடிகை ஜீவிதா ராஜசேகரின் மூத்த மகள் ஷிவானி, கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், அவரை தொடர்ந்து தற்போது அவரின் தங்கையான ஷிவாத்மிக்காவும் கதாநாயகி அவதாரம் எடுத்துள்ளார்.
Shivathmika Rajashekar
ஷிவானி ராஜசேகர், மற்றும் அவரின் தங்கை ஷிவாத்மிக்கா ராஜசேகர் இருவருமே... ஒரு சில தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டாலும், இதுவரை இவர்களால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் அளவிலான கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை.
Shivathmika Rajashekar
ஷிவானி ராஜசேகர்... 'அன்பறிவு' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Shivathmika Rajashekar
இவரை தொடர்ந்து ஷிவாத்மிக்கா ராஜசேகரும், அசோக் செல்வனுக்கு ஜோடியாக 'நித்தம் ஒரு வானம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Shivathmika Rajashekar
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் கவனம் செலுத்திவரும் ஷிவாத்மிகா, விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.
Shivathmika Rajashekar
அந்த வகையில் தற்போது லாவெண்டர் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சியில், கிக் ஏற்றும் அழகில் அக்கா ஷிவானிக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.