பிரபல முன்னணி பாடகர் யேசுதாஸின், மகன் விஜய் யேசுதாஸ் தமிழ் சினிமாவில் நடிகராகவும், பின்னணி பாடகராகவும், ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவருடைய சொந்த ஊர் கேரளா என்றாலும், தன்னுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக மனைவியுடன் சென்னை அபிராமிபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் தன்னுடைய லாக்கர் டிஜிட்டல் முறையில் செயல்படும் என்றும், அதன் ரகசிய குறியீடு இருந்தால் மட்டுமே நகைகளை திருட முடியும் என தெரிவித்தார். இந்த ரகசிய குறியீடு எண் தர்ஷனா மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இவர்களைத் தாண்டி யார் திருட வாய்ப்புள்ளது என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த 11 பேரிடமும் போலீசார் விசாரணை செய்தது மட்டுமின்றி, அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே தர்ஷனாவே அந்த நகைகளை ஏதேனும் செய்துவிட்டு, நாடகமாடுகிறாரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததாகவும், அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான, பயில்வான் ரங்கநாதன் யாரும் எதிர்பார்க்காத விதமாக மற்றொரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.