Kareena Kapoor, Saif Ali Khan
சையிப் அலிகான் - கரீனா கபூர்
பாலிவுட் நடிகர் சையிப் அலிகானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, அவர் இரண்டாவதாக நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை கரீனா கபூரை விட சையிப் அலிகான் 10 வயது மூத்தவர் ஆவார்.
Dharmendra, Hema Malini
ஹேமமாலினி - தர்மேந்திரா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹேமமாலினி, இந்தி நடிகர் தர்மேந்திராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் நடிகை ஹேமமாலினியை விட நடிகர் தர்மேந்திரா 13 வயது மூத்தவர் ஆவார்.
Nazriya, Fahad Faasil
நஸ்ரியா - பகத் பாசில்
தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை நஸ்ரியா, மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் நஸ்ரியாவை விட நடிகர் பகத் பாசில் 13 வயது மூத்தவர் ஆவார்.
Reema sen
ரீமாசென் - தீப் கரன் சிங்
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோதே திருமணம் செய்துகொண்டவர் நடிகை ரீமா சென். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்தும் அவர் விலகிவிட்டார். இவரது கணவர் தீப் கரன் சிங், ரீமா சென்னை விட 9 வயது மூத்தவர் ஆவார்.