தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு, அவருடன் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர்கள் ஏராளம். அப்படி வடிவேலு உடன் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் தான் பாவா லட்சுமணன். வடிவேலு உடன் சேர்ந்து மாயி படத்தில் இவர் நடித்த வாமா மின்னல் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் அரசு படத்தில் குடிகாரன் வேடத்தில் வந்து குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் பாவா லட்சுமணன்.
இதையடுத்து அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்த நடிகர் பாவா லட்சுமணன், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆனவுடன் நான் இறந்துவிட்டதாக கூறி போஸ்டரெல்லாம் ஒட்டப்பட்டது வேதனை அளித்ததாக தெரிவித்தார். தனக்கு இப்படி ஆனது தெரிந்ததும், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் போன் போட்டு நலம் விசாரித்ததாக கூறியுள்ள பாவா லட்சுமணன், வடிவேலு பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.