சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, தன் கடின உழைப்பால் முன்னேறிய சிவகார்த்திகேயன், தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது புதிதாக தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்ட உள்ளாராம்.
இந்நிலையில், அடுத்ததாக தமிழ்நாடில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றையும் கட்ட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டரை சென்னையில் தான் கட்ட உள்ளார்களாம். எந்த இடத்தில் இந்த தியேட்டர் வர உள்ளது என்கிற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இதன்மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் என பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் நடிப்பில் தற்போது மாவீரன் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் மாவீரன் ஜூலை 14-ந் தேதியும், அயலான் தீபாவளிக்கும் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தின் அட்டகாசமான டிரைலர் ரிலீஸ் எப்போது? - வந்தாச்சு அதிகாரப்பூர்வ அப்டேட்