விக்கி AK 62 படத்தில் இருந்து விலக இது தான் காரணமா? மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட கண்டிஷன்.. பரபரக்கும் பணிகள்

First Published | Feb 7, 2023, 2:00 PM IST

'துணிவு' படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தை, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள நிலையில், இவருக்கு அஜித் முக்கிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னனாக உள்ள, அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'துணிவு'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியான இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று நான்காவது வாரமாக பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும்  இதுவரை உலக அளவில் துணிவு திரைப்படம் 300 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்த நிலையில், இந்த சந்தோஷத்தை அஜித் தன்னுடைய குடும்பத்துடன் போர்ச்சுகளில் கொண்டாடி வருகிறார். அஜித் வெளிநாட்டில் செம்ம ஸ்டைலிஷாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் புகைப்படத்தை, ஷாலினி அஜித் சமூக வலைத்தளத்தில் வெளியிட அவை ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பார்க்கப்பட்டது.

17 வயதில் எல்லை மீறும் பேபி சாரா! கையில் சிகரெட்டுடன்.. குப்பு.. குப்புனு புகையை ஊதி தள்ளும் ஷாக்கிங் போட்டோஸ்

Tap to resize

தொடர்ந்து மூன்று வாரங்களாக துணிவு திரைப்படம், வெளியான அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் குறைக்கப்படமால் ஓடிய நிலையில், இந்த வாரம் மைக்கேல்,பொம்மை நாயகி, உள்ளிட்ட 7 படங்கள் வெளியானதால், துணிவு மற்றும் பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு ஆகிய இரண்டு படங்களின் காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

'துணிவு' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் தன்னுடைய 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக, துணிவு படத்தின் ரிலீசுக்கு முன்பே அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், திடீரென ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக விலகியதாக அறிவிப்பு வெளியானது.

இது உண்மையில் ஜோதிகாவா? நியூ லுக்கில் 20 வயசு பெண் போல் மாறிய ஜோ..! ஷாக்கிங் போட்டோஸ்!

தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, AK 62 படத்தை தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி அஜித்துக்கு கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது என்றாலும், தன்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக... மாஸான ஆக்ஷன் காட்சிகள் சிலவற்றை இணைக்க கூறியுள்ளாராம். மகிழ் திருமேனியும் அதற்கேற்ற போல் கதையில் சிறு சிறு மாற்றம் செய்து வருவதாகவும், அஜித் வெகேஷன் முடிந்து இந்தியா திரும்பியதும் இப்படம் குறித்த... அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

அதே போல் விக்னேஷ் சிவன் AK62 படத்தில் இருந்து விலக காரணமும், அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இல்லாதது தான் என்றும், விக்கியின் கதைக்கு ஏற்றவாறே அவர் சண்டை காட்சிகளை வைத்திருந்ததாகவும், கதையை மாற்றம் செய்ய முடியாததால் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும் அஜித்தின் அடுத்த படத்தை விக்கி இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்... என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா?வெளியான புகைப்படம்.. ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

Latest Videos

click me!