அந்த படத்துக்கு ஆஸ்கர் வேணுமா.. காரி துப்பினாலும் புத்தி வரலேல! பாலிவுட் இயக்குனரை வெளுத்துவாங்கிய பிரகாஷ்ராஜ்

Published : Feb 07, 2023, 12:48 PM IST

காஷ்மீர் பைல்ஸ் மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது என நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.

PREV
14
அந்த படத்துக்கு ஆஸ்கர் வேணுமா.. காரி துப்பினாலும் புத்தி வரலேல! பாலிவுட் இயக்குனரை வெளுத்துவாங்கிய பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் கூட நெகடிவ் கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்கி இருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

24

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் பதான் படத்தின் பிகினி காட்சிக்கு பாஜகவின் எதிர்ப்பு தெரிவித்ததை கடுமையாக விமர்சித்து இருந்தார் பிரகாஷ் ராஜ்.

இதையும் படியுங்கள்... மளமளவென வளர்ந்து... அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகாவின் மகள் தியா - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

34

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் காஷ்மீர் பைல்ஸ் மற்றும் பதான் படங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் பிரகாஷ் ராஜ். அதன்படி அவர் கூறியதாவது : “பதான் படத்தை தடை செய்ய விரும்பினார்கள். ஆனால் அப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை எதிர்த்தவர்களால் மோடியின் பயோபிக் படமான பிஎம் நரேந்திர மோடி என்கிற திரைப்படத்திற்கு ரூ.30 கோடி கூட கலெக்‌ஷனை பெற முடியவில்லை.

44

அதேபோல் காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படம் ஒன்றை எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் காரி துப்பினர். அப்படி இருந்தும் இவர்களுக்கு புத்தி வரவில்லை. இதில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கொடுக்கவில்லை என அதன் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி கவலைபட்டாராம். இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது” என பிரகாஷ் ராஜ் சாடி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆர்.ஜே.பாலாஜி, ஜிவி பிரகாஷ் அணிந்திருந்த டீ-சர்ட் விலை இத்தனை லட்சமா..! அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

Read more Photos on
click me!

Recommended Stories