மும்பையை சேர்ந்தவரான நடிகை ஜோதிகா, முதலில் இந்தி படத்தில் தான் நடித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜோதிகா. முதல்படத்திலேயே திறமையாக நடித்து பாராட்டுக்களை பெற்ற ஜோதிகாவுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.
திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஜோதிகா. இவருக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்த பின்னரே சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா. தற்போது மம்முட்டி உடன் மலையாளத்தில் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர இந்தியில் ஸ்ரீ என்கிற திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் போல் காட்சியளிக்கிறார் தியா. அவர் கையில் நாய்க் குட்டி ஒன்றை பிடித்திருக்கும் கியூட்டான புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜோதிகா மற்றும் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... இது உண்மையில் ஜோதிகாவா? நியூ லுக்கில் 20 வயசு பெண் போல் மாறிய ஜோ..! ஷாக்கிங் போட்டோஸ்!