கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. முதலில் கன்னட மொழியில் மட்டும் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு கர்நாடகாவில் அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர். ரிலீஸான அனைத்து மொழிகளிலும் இப்படம் வசூலை வாரிக் குவித்தது.