சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டான 'மெட்டி ஒலி' சீரியலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த தொடரை இயக்கி, நடித்திருந்த திருமுருகனுக்கு ஜோடியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி.
இதை தவிர 'மஞ்சள் மகிமை', 'கதையின் கதை', போன்ற தமிழ் சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாள தொடர்களிலும் நடித்து பிரபலமானார். சுமார் 13 வருடங்கள் சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்து நடித்து வந்த உமா மகேஸ்வரி, 'வெற்றிகொடிக்கட்டு' போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கால்நடை மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டபின் சின்னத்திரை உலகை விட்டு விலகினார். அதே நேரத்தில் 'ஸ்ரீ சாய் பொத்திக்' ஒன்றை துவங்கி, தொழில்துறையிலும் தன்னுடைய திறமையைக் காட்டினார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் சீரியல்களில் நடிக்காவிட்டாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் இரண்டு முறை கிட்சன் ஆப் தி வீக் வாங்கி தன்னுடைய சமையல் திறமையை காட்டி நடுவர்களை அசர வைத்தார்.
இவருக்கு 40 வயதே ஆகும் நிலையில், திடீர் என இவர் உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டதாக தகவல் வெளியானது. என்ன பிரச்சனையால் இறந்தார் என்ற காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
சமீப காலமாகவே மஞ்சள் காமாலை நோயால் இவர் அவதிப்பட்டு வந்ததாகும், இதற்க்கு உரிய சிகிச்சை எடுத்து வந்த போதிலும் தற்போது உயிரிழந்துள்ளார் இந்த தகவல் இவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இவர் பல சீரியல்கள், மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வனஜாவின் உடன் பிறந்த சகோதரி. இவரால் தான் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு உமாவிற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.