தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது.
ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கொரோனா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் அடுத்த மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
மேலும் குட் லக், சாணி காகிதம், போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளது மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியாக நடித்தும் வருகிறார்.
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் எது வெளியானாலும் அது செம்ம வைரலாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் இன்று தன்னுடைய 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கீர்த்திசுரேஷின் செம்ம ஸ்டைலிஷான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதில் பலரும் பார்த்திடாத கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு புகைப்படங்களில் பளீச் பேரழகில் ஜொலிக்கிறார்.
கடந்த ஆண்டே பாலிவுட் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவில் அவரது அந்த கனவும் நிறைவேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் பாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சும் ஸ்டைலிஷ் உடையில், செம்ம கெத்து காட்டுகிறார்... இன்றைய தினம் கீர்த்திக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எத்தனை மாடர்ன் உடை அணிந்தாலும், பட்டு சேலை அணிந்து போஸ் கொடுப்பது தனி அழகு தான்... அதிலும் கீர்த்தி சுரேஷ் பேரழகு போங்க