இதுவரை 16 போட்டியாளர்கள் மட்டுமே கடந்த நான்கு சீசன்களில் உள்ளே வந்த நிலையில், இம்முறை 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர்.
இதுவரை பெரிதாக இந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தாலும் வரும் வாரங்களில் சூடு பறக்க பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வாரத்தில் எந்த ஒரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றாலும், இரண்டாவது வாரத்தில் பவானி ரெட்டி மற்றும் தலைவி தாமரையை தவிர 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.
எனவே இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது..
நேற்றைய தினம் நாமினேட் செய்யப்பட்ட 15 போட்டியாளர்களின், 10 காப்பாற்றப்பட்ட நிலையில், தற்போது நாமினேஷன் பட்டியலில், அபிஷேக், நாடியா, சின்னப்பொண்ணு, மதுமிதா, மற்றும் வரும் ஆகியோர் உள்ளனர்.
பொதுவாகவே கடந்த நான்கு பிக்பாஸ் சீசனை பொறுத்த வரையில் இளம் வயது வயதில் மூத்த போட்டியாளரை தான் வெளியேற்றுவார்கள். எனவே, இந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணமாக, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மலேசிய மாடலும் சோசியல் மீடியா பிரபலமுமான நாடியா வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளது.
மிகவும் நிறுத்தி நிதானமாக விளையாடி, இந்த முறை பைனலிஸ்ட் பட்டியலில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரபலம் வெளியேறியுள்ளதா பிக்பாஸ் ரசிகர்கள் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.