ஒரு படத்திலேயே சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு சென்றுவிடும் கோலிவுட் நாயகிகள் பலர் மத்தியில் , 18 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் த்ரிஷா.
தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசி வரும் த்ரிஷா, 'பொன்னியின் செல்வன்' படத்திலும் டப்பிங் பேசி வருகிறார். இந்த தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்தது.
த்ரிஷா தமிழில் கமிட் ஆகி நடித்து வந்த, ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது நடிகர் மோகன்லாலுடன் நடித்து வரும் 'ராம்' என்கிற படம் மட்டுமே இவரது கை வசம் உள்ளது.
தற்போது பட வாய்ப்புகள் சொல்லிகொள்ளுபடி இல்லாததால், த்ரிஷா தெலுங்கில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடர் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இதனை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரியில் இந்த வெப் சீரிஸ் நேற்று பூஜையுடன் துவங்கியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுநாள் வரை திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, தன்னுடைய முதல் வெப் சீரிஸுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டதால், பணம் தான் முக்கியம் என வெப் சீரிஸில் நடிக்க த்ரிஷா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.. நயன்தாரா, சமந்தா, தமன்னா வழியில் தற்போது த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.