நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இப்படம் கைவிடப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலாவுடன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டார் சூர்யா. இதையடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் வேகமெடுக்க தொடங்கின. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யா 41 படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சூர்யா 41 படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் உண்மையில் அது சூர்யா 41 படத்தின் வீடியோ இல்லையாம், காப்பான் பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் படத்துக்கு ஆசைப்பட்டு பாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நெல்சன்... அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே