சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். கடந்த 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நெல்சனுக்கு அனிருத் மூலம் நயன்தாராவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
பல வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நெல்சன், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டியும் நிலவியது.
தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 29ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் நெல்சன் தவறவிட்ட தகவல் வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் தான் குட்லக் ஜெர்ரி என்பதால் இப்படத்தையும் நெல்சன் இயக்கினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் விரும்பினார்களாம். இதன்மூலம் பாலிவுட்டுக்கு சென்றுவிடலாம் என்கிற ஆசையில் முதலில் சம்மதம் சொன்ன நெல்சன், பின்னர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததும், குட்லக் ஜெர்ரி படத்திலிருந்து விலகிவிட்டாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... PRIYANKA DESHPANDE : கணவருடன் விவாகரத்தா?.... முதன்முறையாக மனம்திறந்து பேசிய தொகுப்பாளினி பிரியங்கா