விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை பிரியங்கா கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பிரியங்கா, கடந்த சில வருடங்களாக கணவரைப் பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. அதுமட்டுமின்றி அண்மையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுகூட பிரீஸ் டாஸ்கின் போது அவரது கணவர் வராதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவரைப் பற்றி பேச மறுப்பதாகவும் செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் பிரியங்கா கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.
இந்நிலையில், தனது கணவர் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார் பிரியங்கா. ரசிகர் ஒருவர், திருமணத்துக்கு பின் எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா, “உங்களை நன்றாக புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்” என தெரிவித்து விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் பட நடிகர்களிடையே மோதல்... ஷாக் ஆன ரசிகர்கள்