மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
இதனிடையே இப்படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சர்தார் படத்துக்கு போட்டியாக ஜெயம் ரவி படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயம் ரவி தற்போது அஹமத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இறைவன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.