Jailer movie : ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் பட கதை லீக்கானது?

First Published | Jun 19, 2022, 3:02 PM IST

Jailer movie : பீஸ்ட் படத்தை ஒரு மால் செட்டினுள்ளே எடுத்து முடித்த நெல்சன், அதே பாணியில் ஜெயிலர் படத்தை ஒரு பிரம்மாண்டமான ஜெயில் செட்டின் உள்ளேயே எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். 

நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக ரஜினியின் 169-வது படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் நெல்சன். இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப திட்டமிட்டுள்ள நெல்சன், அதற்கான திரைக்கதையை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறாராம்.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது.

Tap to resize

அதைத்தொடர்ந்து இப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்கிற யூகங்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்தின் கதைப்படி நடிகர் ரஜினிகாந்த் அனுபவம் வாய்ந்த ஜெயில் வார்டனாக இருப்பதாகவும், அவர் கண்காணிப்பில் உள்ள சிறையில் இருந்து பயங்கரமான குற்றவாளிகள் சில தப்பிக்க முயற்சிக்க, அதனை ரஜினி எப்படி தடுத்தார் என்பது தான் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தை ஒரு மால் செட்டினுள்ளே எடுத்து முடித்த நெல்சன், அதே பாணியில் ஜெயிலர் படத்தை ஒரு பிரம்மாண்டமான ஜெயில் செட்டின் உள்ளேயே எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.

இதையும் படியுங்கள்.... Vikram All Time Record : ‘பாகுபலி 2’ சாதனையை அடிச்சு தூக்கி பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த ‘விக்ரம்’

Latest Videos

click me!