தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி கரம்பிடித்தார். மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்டமான பீச் ரெசார்ட்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்ற விக்கி - நயன் ஜோடி அங்கு சாமி தரிசனம் செய்ததோடு, ஜோடியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்காக மன்னிப்பு கேட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டார்.
இதன்பின்னர் ஜோடியாக கேரளாவுக்கு கிளம்பிய விக்கி - நயன் ஜோடி, அங்கு நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்தனர். நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து ஷூட்டிங் இருப்பதால் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லும் பிளானை தள்ளிவைத்துள்ளதாக கூறப்பட்டது.
திருமணம் முடிந்ததும் முதலில் அவர் ஜவான் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் இயக்குனர் அட்லீ, நயன்தாராவின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் பெர்மிஷன் வாங்கிவிட்டு ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளார் நயன்தாரா. தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Samantha : காத்துவாக்குல கவர்ச்சியை அள்ளித்தெளித்த சமந்தா... வைரலாகும் கிக்கான கிளாமர் போட்டோஸ்