Samantha : காத்துவாக்குல கவர்ச்சியை அள்ளித்தெளித்த சமந்தா... வைரலாகும் கிக்கான கிளாமர் போட்டோஸ்

First Published | Jun 19, 2022, 12:31 PM IST

Samantha : சிகப்பு நிற கிளாமர் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு இவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின், சமந்தாவின் சினிமா மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் இவரின் கிளாமர் அவதாரம் தான்.

விவாகரத்துக்கு பின் கிளாமர் வேடங்களில் துணிச்சலாக நடிக்கத் தொடங்கி உள்ளார் சமந்தா. குறிப்பாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் ஆடிய ஐட்டம் சாங் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதன்காரணமாக தொடர்ந்து கிளாமர் வேடங்களில் நடிக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

தற்போது நடிகை சமந்தா நடிப்பில் குஷி என்கிற தெலுங்கு படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க அவர் ஓகே சொல்லி உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக லிப்லாக் காட்சியும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர யசோதா, சகுந்தலம் ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார் சமந்தா. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

படங்களில் மட்டும் கவர்ச்சி காட்டி வந்த சமந்தா தற்போது போடோஷூட்டில் விதவிதமான கிளாமர் உடைகளில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சிகப்பு நிற கிளாமர் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. அந்த உடையில் அவர் ரெட் வெல்வெட் கேட் போன்று இருப்பதாகவும் நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.

Latest Videos

click me!